வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை: அரச அச்சகம் அறிவிப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி இதுவரை தொடங்கவில்லை என்று அரசாங்க அச்சகம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
இன்று (16.03.2023) காலை குறித்த எழுத்து மூல அறிவிப்பை அரசாங்க அச்சகத்தின் பணிப்பாளர் நாயகம் கங்கானி கல்பனா லியனகே அனுப்பி வைத்துள்ளார்.
வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிக்கான செலவு நிதியமைச்சினால் இதுவரை வழங்கப்படாத நிலையில் அது தொடர்பான பணிகளை ஆரம்பிக்க முடியாதிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணி
தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்ததை தொடர்ந்து வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகளுக்கான நிதியை விடுவிக்குமாறு அரசாங்க அச்சகம் இரண்டு நாட்கள் முன்னரும் நிதியமைச்சிடம் எழுத்து மூல கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும் இதுவரை அதற்கான பதில் எதுவும் நிதியமைச்சிடமிருந்து கிடைக்கப் பெறவில்லை.
இந்நிலையில் குறைந்த பட்சம் 200 மில்லியன் ரூபா அளவிலாவது நிதி கையளிக்கப்பட்டால் மாத்திரமே வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்க அச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
