பலாங்கொடையில் காணாமல் போன மற்றுமொரு நபர்! பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கை
பலாங்கொடை சமனல வத்த பகுதியில் வசிக்கும் ஆண்ணொருவர் நேற்று முன்தினம் (08.05.2023) காலை முதல் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமனலவத்தை பகுதியைச் சேர்ந்த துஷார சாமிபத் என்ற திருமணமான 38 வயதுடைய ஆண்ணொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மனைவி முறைப்பாடு
இவர் தனது தேயிலை தோட்டத்திற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மதியம் 11.00 மணி ஆகியும் கணவன் வீட்டுக்கு வராததால், தேயிலைத் தோட்டத்துக்குச் சென்ற மனைவி செடிகளுடன் இருந்த இரண்டு செருப்புகளில் ஒன்றையும், தேயிலை பறிக்கப் பயன்படுத்திய உரப் பையையும் கண்டெடுத்துள்ளார்.
தேடுதல் நடவடிக்கை தீவிரம்
நேற்று பகல் முழுவதும் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதிலும் காணாமல் போனவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
