விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் இன்று (24.1.2026) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை நகரில் சர்ச்சைக்குரிய வகையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுந்த முறுகல் நிலையை அடுத்து, சட்டம் ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டில் கஸ்ஸப தேரர் அண்மையில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை
சிறைச்சாலையில் இருந்த தேரருக்கு இன்று காலை திடீரென சுகவீனம் ஏற்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவர் மருத்துவமனையின் விசேட பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு, அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மருத்துவமனையைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.