பலாலி விமான சேவைகளின் செயற்பாடு: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு (Video)
யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தில் இம்மாத இறுதியில் இருந்து விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை அந்த விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும், இந்தியாவின் நிதி உதவியின் கீழ் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19.10.2022) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சியினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
