10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள பேக்கரி உற்பத்தி
எதிர்வரும் வாரங்களில் பேக்கரி உற்பத்திகளின் விலையை 10 ரூபாயினால் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்த ஒரு லீட்டர் பாம் எண்ணைக்கு 250 ரூபாய் தீர்வை வரி விதித்தமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய பாம் எண்ணெய் ஒரு லீட்டர் 500 ரூபாவை கடந்துள்ளது. மேலும் பேக்கரி உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மாஜரின் ஒரு கிலோ கிராம் 600 ரூபாவை கடந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் இறக்குமதி செய்யும் மாஜரினுக்கு 400 ரூபாய் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய மாஜரின் ஒரு கிலோ கிராமினை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு 1000 ரூபாயை கடந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் 10 ரூபாயினால் பேக்கரி உற்பத்தியின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.