பேக்கரி உற்பத்திகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மின்சார கட்டண உயர்வால் பேக்கரி உற்பத்தித் தொழில் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யாவிட்டால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையினை அதிகரிக்க நேரிடும் என வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மீள் பரிசீலனை
மின்சார கட்டணம் 400 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனுடன் 36 சதவீத வருமான வரியும் 15 சதவீத வற் வரியும் செலுத்தப்பட வேண்டும்.
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை மேலும் அதிகரித்தால் நுகர்வோர் கொள்வனவு குறைவடையும். இதனால் தமது தொழிற்துறை மேலும் சிக்கலை எதிர்நோக்கும்.
பேக்கரி உற்பத்திகளின் விலையினை தற்போதைய மட்டத்தில் தொடர்ந்தும் பேணுவதானால் அரசாங்கத்தின் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் வரிக்கொள்கை தீர்மானங்கள் மீள் பரிசீலனை செய்யப்பட்டு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.