இலங்கையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு! நாடு முழுவதிலும் இழுத்து மூடப்படும் அபாயத்தில் பேக்கரிகள்
கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகள் மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் இரத்தினபுரி, கஹவத்தை, கொடகவெல, பல்லேபெத்த மற்றும் இறக்குவானை போன்ற பகுதிகளில் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பேக்கரி செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோதுமை மா போன்ற பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பண்டங்களின் தரம் குறைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் நடமாடும் பேக்கரி தயாரிப்பு விற்பனையாளர்களும் வேலையின்மை அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன்,நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கோதுமை மாவுக்கான கட்டுப்பாட்டு விலையை விரைவில் அமுல்படுத்தி மாவின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri