தேசபந்துவிற்கு பிணை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
மாத்தறை வெலிகம ஹோட்டல் ஒன்றிற்கு எதிரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று தொடர்பில் தேசபந்து கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இன்றைய தினம் தேசபந்து மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
போகம்பர சிறையில் தடுத்துவைப்பு
இதன்படி தலா பத்து லட்சம் ரூபா இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் தேசபந்து தென்னக்கோன் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வெலிகம பிரதேச ஹோட்டல் ஒன்றிற்கு எதிரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மனித படுகொலைக்கு சூழ்ச்சி செய்தமை குறித்து தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.
பின்னர் அவர் மாத்தறை நீதிமன்றில் முன்னிலையானதைத் தொடர்ந்து இன்று வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் தேசபந்து போகம்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முற்பகல் மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.