நியூசிலாந்து செல்ல முற்பட்ட மூவருக்கு பிணை - 64 பேருக்கு விளக்கமறியல்
சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்வதற்காகத் திருகோணமலையில் தங்கியிருந்த 67 பேரில் 64 பேரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்குப் பிணை வழங்குமாறும் திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் இன்று (13) குறித்த சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய போதே இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களாகத் திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது அரசாங்க புலனாய்வுத் துறைக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபர்களை நேற்று கைது செய்ததாகவும் தெரியவருகின்றது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முப்பத்து ஒரு வயது உடைய தாய் 14 வயதுடைய மகன் மற்றும் 9 வயதுடைய மகள் ஆகியோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பிணையில் செல்லுமாறு நீதிமன்றம் கட்டளை இட்டுள்ளது.
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam