மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட சஜித்தின் ஆதரவாளர்கள் பிணையில் செல்ல அனுமதி
மட்டக்களப்பு (Batticaloa) நகர் பகுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் சுவரொட்டிகளை இரவில் ஒட்டிக்கொண்டிருந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரு ஆதரவாளர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று (14.09.2024) பிறப்பித்துள்ளது.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (13) நள்ளிரவு பொலிஸார் வீதி கண்காணிப்பு நவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
சுவரொட்டிகளை ஒட்டியமை
இதன்போது, மாமாங்கம் பகுதியில் வீதியிலுள்ள மின்சார தூண்கள் மற்றும் சுவர்களில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரோமதாஸவை ஆதரித்து தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சுவரொட்டிகளையும் மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்திய போது இருவரையும் நீதவான் சரீரப்பிணையில் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
