விளக்கமறியலில் இருந்த ஜொன்ஸ்டன் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்மானம்
கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ(Johnston Fernando) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடுமையான நிபந்தனைகளுடன் அவர் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிணையில் விடுதலை
கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக அவர் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனையடுத்து, இவரை இன்றுவரை(30) விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு கடுமையான நிபந்தனைகளுடனான பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
