பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் வீடு திரும்பினார்
பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கான் இன்று தடுப்புக்காவலில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டுக்காக அவர் கடந்த 28 நாட்களாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், கடந்த 3 ஆம் திகதி சோதனை நடத்தினர்.
#WATCH Aryan Khan released from Mumbai's Arthur Road Jail few weeks after being arrested in drugs-on-cruise case pic.twitter.com/gSH8awCMqo
— ANI (@ANI) October 30, 2021
இதன்போது அங்கு போதைப்பொருட்களை பயன்படுத்தி விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கான் மகனான ஆர்யன் கான் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதன்போது,அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், நீதிமன்றத்தினால் இரண்டு தடவைகளாக பிணை மறுக்கப்பட்ட பின்னர் நேற்று 14 நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை அனுமதிக்கப்பட்டது.
இதனையடுத்தே இன்று அவர் தடுப்புக்காவலில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம்.. யார் தெரியுமா Cineulagam

இயக்குனரும், நடிகருமாக கே.பாக்யராஜ் பிறந்து, வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகான வீடு Cineulagam
