அமரகீர்த்தி கொலை வழக்கில் 37 பேருக்கு பிணை
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் தொடர்பில் 37 பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கம்பஹா நீதிமன்றத்தின் மூவரடங்கிய சபையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அமரகீர்த்தி அத்துகோரள கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
காலி முகத்திடல் போராட்டம்
காலி முகத்திடல் போராட்ட களத்திற்கு அருகில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலை நாட்டில் வன்முறையை தோற்றுவித்ததோடு, அலரிமாலிகையில் இருந்து பொலன்னறுவையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நிட்டம்புவ நகர மையத்தில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இதன்போது அமரகீர்த்தி அத்துகோரளவின் தனிப்பட்ட பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஜெயந்த குணவர்தனவும் சம்பவத்தில் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
