திருகோணமலையில் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு
சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய பணியின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான பை மற்றும் காலணிகள் நேற்று (25) திருகோணமலையில் உள்ள ஜூப்லி மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது அதன் கிழக்கு மாகாண நிர்வாக சபை பணிப்பாளர் யேசுதாசன் ரொகான்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
பலர் பங்கேற்பு
இதன் போது சுமார் 150 மாணவ மாணவிகளுக்கான பாடசாலை உபகரணங்கள் நன்கொடைகளாக வழங்கப்பட்டது.
மேலும் வாழும் போது வாழ்த்துவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் பல சமூக சிவில் செயற்பாட்டாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் குறித்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதுடன் புதிய அங்கத்தவர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |