இஸ்ரேல் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட பகீர் சம்பவம் : உக்கிரமடையும் காசா போர்
மூன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மேற்குக் கரைக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான எல்லைக் கடவையில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்டான் சாரதி இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மீது திடீரென்று துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவமானது சுமார் 11 மாதங்களாக நீடிக்கும் காசா போரினை மேலும் தூண்டுவதாக அமைந்துள்ளது.
வான்வழித் தாக்குதல்
இந்நிலையில் வடக்கு காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு மூத்த உதவி அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது ஜோர்டான் ஆற்றின் குறுக்கே உள்ள ஆலன்பி பாலத்தில் நடந்துள்ளது.
இஸ்ரேல் தரப்பில் நடந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், ஜோர்டானில் இருந்து லொறியில் வந்த தீவிரவாதி ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் தொடர்புடைய தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஜோர்டான் தரப்பில் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், எல்லைக் கடக்கும் பாதை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட சாரதி தெற்கு ஜோர்டானில் உள்ள செல்வாக்குமிக்க ஹுவைதாட் பூர்வகுடி சமூகத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
