பதுளையில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற மருத்துவர் கைது
பதுளையில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருத்துவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் 44 வயதான மருத்துவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் குறித்த மருத்துவரை கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மாத்திரைகள்
அனுமதிப்பத்திரமின்றி குறித்த நபர் போதையை ஏற்படுத்தக் கூடிய மாத்திரைகளை வைத்திருந்தார் எனவும், அவரிடமிருந்து 145 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை சந்தேகநபர் பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நபர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த மருத்துவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
