கிராந்துருகோட்டையில் கோர விபத்து : முச்சக்கரவணடி செலுத்திய பெண் சாரதி பரிதாபப் பலி!
பதுளை மாவட்டம், கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 ஆம் கட்டை பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வீதி விபத்தில், முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற 39 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
வானும், முச்சக்கரவண்டி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியைச் செலுத்திய பெண் சாரதி படுகாயமடைந்த நிலையில், உடனடியாக கிராந்துருகோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. உயிரிழந்தவர் தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் வானின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிராந்துருகோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam