திருகோணமலை மாவட்டத்தில் கடும் மழையால் வேளாண்மை பெரும் பாதிப்பு
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால், கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. கந்தளாய் நீர்பாசனப் பொறியாளர் பிரிவினரின் தகவலின்படி, சுமார் 10,000 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
கந்தளாய், வான்-எல, வட்டுக்கச்சி, வென்றாசன்புற, முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம், ஆயிலியடி உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
இதனால், கடன் பெற்று செய்கை செய்திருந்த விவசாயிகள் மிகுந்த இழப்புகளை சந்தித்து, நிர்ப்பந்தமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
வெள்ளத்தால் ஏற்பட்ட இந்நஷ்டத்துக்கான நஷ்டஈடு வழங்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan