கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றும் (26) நாளையும்(27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடுமுறைக்கான அனுமதியினை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகர வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
விடுமுறை
இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், க.பொ.த (உ/த) பரீட்சை நிலையங்களாக அமையாத அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்றும், நாளையும்(27) விடுமுறை வழங்கப்படுகின்றது.

தொடர்ந்தும் பரீட்சை நிலையங்களாக அமையாத கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கான 3ம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகும்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம் பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா அதிகாரிகளுக்கு ஏற்படக் கூடிய அசெளகரியங்களை தவிர்ப்பதற்காகவே இவ்விடுமுறை வழங்கப்படுகின்றது’’ என சுஜாத்தா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri