யாழில் மோட்டார் சைக்கிளை உடைத்து பணம் கொள்ளை
யாழ்ப்பாணம், தட்டாதெருச் சந்திக்கு அருகில் மருத்துவர் ஒருவரின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின்புறப் பகுதியை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக் கமராப் பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், நல்லூர், அரசடிப் பகுதியில் வைத்து சந்கேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் இருந்து 10 போதை மாத்திரைகளும், 240 மில்லிகிராம் ஹெரோய்னும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
திருடிய பணம்
இந்நிலையில். திருடிய பணத்திலேயே அவற்றை அவர்கள் கொள்வனவு செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
இதற்கமைய கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்..
மேலும். சந்தேகநபர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்பதும், போதைப்பொருள்கள் வாங்குவதற்காகத் திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள் என்பதும் முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |