நாட்டின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை! மக்களே அவதானம்
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு இவ்வாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் நிற எச்சரிக்கை
கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, எலபாத, அயகம, கிரியெல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 09.00 மணி வரை குறித்த மண்சரிவு எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
