இரணைமடுக் குளத்தின் நீர் வரத்து அதிகரிப்பு
இரணைமடுக்குளத்தின் அனைத்து கதவுகளும் திறந்துள்ள போதிலும் தொடர்ச்சியாக வரும் அதிகரித்த நீரின் வரத்து காரணமாக தொடர்ச்சியாக நீரை வெளியேற்றவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
அதேவேளை குளத்தின் கதவுகள் மற்றும் கலிங்கு பகுதியூடாக வெளியேறும் நீரானது பரந்து செல்லும் வழியில் முதலாவது படிக்கட்டு அமைந்துள்ள பகுதியில் உள்ள அணையானது அரிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலமையினை ஆராய்ந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டு வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ வேதநாயகன் அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அந்தப்பகுதிக்கு சென்று நிலமையினை ஆராய்ந்தனர்.
அத்துடன் தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான விதியான புளியம்பொக்கனை பகுதியில் பாலம் ஒன்று தாழ் இறங்கிதன் காரணமாக முல்லைத் தீவு கிளிநொச்சி காண போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.

