நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்
இலங்கையில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சீரற்ற காலநிலையையடுத்து, ஏற்பட்ட அனர்த்தங்களால் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
பாதிப்புக்கள்
அத்துடன், ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 624 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 79 ஆயிரத்து 871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 8 ஆயிரத்து 470 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 517 பேர் இடைத்தங்கல் முகாம்களிலும், 45 ஆயிரத்து 418 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 209 பேர் உறவினர் வீடுகளிலும் தங்கியிருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் 103 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.
மேலதிக தகவல் - சிவா மயூரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |