மறு அறிவித்தல் வரை, கடலுக்கு செல்லவேண்டாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புக்கு அப்பால் உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய அபாயம் உள்ளது.
சில நேரங்களில் மிக அதிக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்கள அறிவிப்பு
இந்தநிலையில் புத்தளத்திலிருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சுமார் 2.5 – 3.0 மீ உயரம் கொண்ட கடல் அலைகள் எழக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ‘ஃபெங்கல்’ சூறாவளியானது காங்கேசன்துறைக்கு வடக்கே 280 கிலோமீற்றர் தொலைவிலும், திருகோணமலைக்கு வடக்கே 420 கிலோமீற்றர் தொலைவிலும் இன்று பிற்பகல் 02.30 மணியளவில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது, இன்று மாலை மேற்கு, வட-மேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வட தமிழ்நாடு - புதுச்சேரி கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ் நாட்டில் குறிப்பாக சென்னையில் கடும் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தீவின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படகிறது.
You My Like this Video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |