அமெரிக்காவில் ஒரே நாளில் இரத்து செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான விமானங்கள்
அமெரிக்காவில் தற்போது பனிக்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்தநிலையில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 1,500 விமானங்கள் ஒரே நாளில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
வாகனங்களை இயக்க முடியாத நிலை
மேலும், பனிப்புயல் அதிகமாக வீசி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாலைகளில் எங்கும் பனி படர்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் தொடர்ந்து பனிப்புயல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
Dallas சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகபட்சமாக 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.