சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இந்த வருடம் சுகாதார துறைக்காக ஒதுக்கப்பட்ட 410 பில்லியன் ரூபாவில் 180 பில்லியன் ரூபா மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அண்மைய பொருளாதார நெருக்கடி காரணமாக சுகாதாரத் துறையில் சில பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும், நிலைமை நிர்வகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மருத்துவ உபகரண கைத்தொழில் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் வருடாந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் 2015 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்த சங்கம் இந்த நாட்டிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும் சேவைகளையும் வழங்கி தனித்துவமான பணியை நிறைவேற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |