தமிழர் காணியில் விகாரையை நிறுவ வேண்டியதன் பின்னணி என்ன..! ரவிகரன் எம்.பி கேள்வி

Jaffna Parliament of Sri Lanka Government Of Sri Lanka
By Thileepan Jun 24, 2026 05:25 AM GMT
Report

தமிழ் மக்கள் மனிதப்புதைகுழிகளுக்கான நீதியை கோருவதுடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி பேன்றவற்றிற்காகவும் தொடர்ந்து போராடி வருகின்றார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,    

கொழும்பில் திருமணத்திற்கு சென்று வீடு திரும்பிய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பில் திருமணத்திற்கு சென்று வீடு திரும்பிய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

நல்லிணக்கம் 

இதுவரை இவற்றுக்கு விடையில்லாத வரை நல்லிணக்கம் எப்படி மலரும் எனவும் கேள்வி எழுப்பியதுடன், இந்த தீவில் நல்லிணக்கம் மலராதவரை அபிவிருத்தி என்பது சாத்தியமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர் காணியில் விகாரையை நிறுவ வேண்டியதன் பின்னணி என்ன..! ரவிகரன் எம்.பி கேள்வி | Background To Establishing Viharai In Tamil Land

அத்தோடு ஒட்டுமொத்த தீவிற்கும் பௌத்த சிங்கள முலாம் பூசுவதாலோ, வரி அறவீடுகளைச் செய்வதாலோ நாடு அபிவிருத்தி அடையாதெனவும் தெரிவித்துள்ளார்.

இந்த தீவின் பல்வகைமையை கண்ணியப்படுத்துவதுடன், இன நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் திணைக்களங்களை தூய்மைப்படுத்துமாறும், உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு, சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள் - அங்கீகரித்தல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் விதிமுறைகள் - அங்கீகரித்தல் என்பவற்றை மையப்படுத்திய இன்றைய விவாதப்பொழுதிலே, அரசின் வருமானத்தை உயர்த்தவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பண்டங்களின் இறக்குமதி மேலான கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளைக் கருத்திற் கொண்டும் அரசின் மேற்படியான சட்டமூலங்களும் விதிமுறைகளும் கட்டளைகளும் கொண்டுவரப்படுகின்றன.

வடக்கு மாகாணத்துக்கான அரசின் முதலீடுகள்

வடக்கு மாகாண தெங்கு முக்கோண வலயத்துக்கான இலங்கை அரசின் முதலீடுகள் வரவேற்புக்குரியன. எனினும் தென்னை மரங்களில் ஏற்படும் நோய்த்தொற்றுக்கு முழுமையான தீர்வை காண இயலாது வன்னி பெருநிலத்தின் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தேங்காய் உற்பத்தியின் வீழ்ச்சியில் இது செல்வாக்குச் செலுத்துகின்றது. இவற்றை எதிர்கொண்டு நிலைபேறான விளைச்சலுக்காக தென்னை அபிவிருத்தி சபை கூடுதல் ஆய்வு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

தமிழர் காணியில் விகாரையை நிறுவ வேண்டியதன் பின்னணி என்ன..! ரவிகரன் எம்.பி கேள்வி | Background To Establishing Viharai In Tamil Land

சோளத்தின் மீது அதிகரிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியால் விலங்குத் தீவனங்கள் மற்றும் பண்ணை சார் உற்பத்திப்பொருள்களின் விலை உயர்வடைந்து மீண்டும் அடித்தட்டு மக்களுக்கு அவை சுமையாகாத வகையில் இருப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

சேர்பெறுமதி வரி(திருத்தச்) சட்டமூலத்தின் ஊடான திருத்தங்களால் ஏற்படும் விளைவு அதிர்வுகள், அடித்தட்டு மக்கள் மற்றும் சிறுவணிகதாரர்களின் இயல்பொழுங்கில் அதீத நெருக்கீட்டை ஏற்படுத்தாதிருக்க, திருத்தங்களின் தொடர் ஏற்பாடுகள் மீதும் அரசு கவனங் கொள்ளவேண்டும்.

முக்கியமாக விற்றுமுதல் எல்லை குறைப்பு, விற்பனை முனைப் பொறிகளைக் கட்டாயமாக்கல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளை விடவும் மிகவும் இறுக்கமாக இங்கு நடைமுறைப்படுத்தப்படும் இந்த நிதிச் சேவைகளுக்குரிய வரி உயர்வு வணிகதாரர்களையும் நிதிநிறுவனங்கள் ஊடாக சேவை பெறும் மக்களையும் பாதிக்கக்கூடியன.

நிதி நிறுவனங்கள் மீதான சுமை

நிதி நிறுவனங்கள் மீது வைக்கப்படும் மேற்படியான சுமை, சங்கிலித் தொடராக மக்களிடமே மீண்டும் மடைமாற்றம் செய்யப்படக்கூடியன. வரி ஏய்ப்புகளை முறைப்படுத்தல், உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்தல், சட்டவிரோத நடைமுறைகளை கட்டுப்படுத்தல், நிருவாக மட்டங்களை வலுப்படுத்தல், நோக்கத்தை தொலைத்து கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் பங்குதாரர்களாக செயற்படும் தொல்லியல் திணைக்களம், மகாவலி அதிகார சபை, வனவளத்துறை, வன உயிரிகள் திணைக்களம் என்பவற்றை நோக்கத்திற்கேற்ப வழிப்படுத்தல் என்பவற்றிலும் அரசு கவனம் கொள்ள வேண்டும்.

கொக்குத்தொடுவாயில் தனியார் காணியில் அத்துமீறி உப்பளம் அமைக்க கொடுப்பதா மகாவலி அதிகார சபையின் வேலை? அல்லது தமிழர் விளை நிலங்களுக்கு குறுக்காக வேலி போடுவதா அதன் வேலை?

நீதிமன்ற உத்தரவுகளை புறந்தள்ளி, வெளிப்படையான ஆய்வுகளைப் புறந்தள்ளி, படையினர், பொலிஸாரின் பாதுகாப்போடு இரகசியமாக தமிழர் தொல்லியல் அடையாளங்களை சிதைப்பதா தொல்லியல் திணைக்களத்தின் வேலை? முற்றுமுழுதாக இராணுவப் பாதுகாப்பிற்குள் இருந்த குருந்தூர் மலையில், நாங்கள் வழிபட்டு வந்த அந்த சூலத்தை திருடியது யார்?

இவ்வாறான தமிழர் வழிபாட்டு அடையாளங்களை திருடுவது தான் படையினர் பணியா? சிங்கள பௌத்தர் இல்லாத கொக்கிளாயில் விகாரையை - அதுவும் தமிழர் காணியில் நீங்கள் நிறுவ வேண்டியதன் பின்னணி என்ன?

வெட்டு வாய்க்கால் விகாரைக்குரிய பின்னணி 

சிங்களவர்களே வாழாத வெட்டு வாய்க்காலில் நீங்கள் கட்டிய அந்த விகாரைக்குரிய பின்னணி என்ன? அங்கு புத்தர் பெருமான் வருகை தந்தாரா? அல்லது சிங்கள பௌத்தர்கள் வசித்தனரா? இவற்றை எல்லாம் நிறுவி, இனி எப்படி எல்லாம் வரலாற்றை மாற்றப்போகிறீர்கள்!

நாட்டின் அபிவிருத்தியை வரி அறவீடுகளால் மட்டும் கண்டுவிடமுடியாது. ஒட்டுமொத்த தீவையும் பௌத்த சிங்கள முலாம் பூசுவதன் ஊடாகவும் கூட ஏற்படுத்தி விடமுடியாது.

தமிழர் காணியில் விகாரையை நிறுவ வேண்டியதன் பின்னணி என்ன..! ரவிகரன் எம்.பி கேள்வி | Background To Establishing Viharai In Tamil Land

இந்தத் தீவின் பல்வகைமையை கண்ணியப்படுத்துங்கள். இன நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் திணைக்களங்களை தூய்மைப்படுத்துங்கள்.

உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த எங்களின் நிலங்களை எங்களிடம் தாருங்கள். இன்றளவில் 400ஐ தாண்டும் எங்கள் உறவுகள் என்புகளாகி செம்மணியில் இன்றும் சாட்சிகளாக நீதிக்காக காத்திருக்கிறார்கள்.

மறுபுறம் எங்களுக்காக உடன் நின்றவர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக விடுதலைக்காக காத்திருக்கிறார்கள். உங்களிடம் நம்பி ஒப்படைத்து இன்றளவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களாக நாம் தேடிக்கொண்டிருக்கும் எங்கள் உறவுகளைத் தாருங்கள்.

இவற்றுக்கு விடையில்லாத வரை நல்லிணக்கம் எப்படி மலரும். நல்லிணக்கம் மலராத வரை தீவிலே அபிவிருத்தி எவ்வாறு விளையும்! இந்தத் தீவிலும் கூட, நீதி என்பது அனைவருக்குமானதாக இருக்க வழி செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் மூடப்படும் மதுபானசாலைகள் - வெளியாள அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் மூடப்படும் மதுபானசாலைகள் - வெளியாள அறிவிப்பு

கைதினை தடுக்க அவசரமாக மனுத்தாக்கல் செய்த கோட்டாபய! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கைதினை தடுக்க அவசரமாக மனுத்தாக்கல் செய்த கோட்டாபய! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு


மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US