சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02

Jaffna Hospitals in Sri Lanka Election Dr.Archuna Chavakachcheri
By Independent Writer Jul 15, 2024 03:41 AM GMT
Independent Writer

Independent Writer

in கட்டுரை
Report
Courtesy: Mossad

 யாழ் வைத்தியத்துறையில் மாத்திரமல்ல இலங்கை முழுவதிலும் பாரிய பிரளயத்தை ஏற்படுத்திவிட்டுள்ள வைத்திய காலநிதி அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்கள் பற்றிய தேடல்களை மேற்கொண்டபோதுஇ பல அதிர்ச்சிகரமான தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன. மருத்துவத்துறையை அடிப்படையாக வைத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற ஏராளமான சீர்கேடுகள்இ முறைகேடுகள் பற்றி பொதுமக்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து எமக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்கள், குற்றச்சாட்டுக்கள்இ சந்தேகங்கள் போன்றனவற்றின் தொகுப்பு இது: 

தங்கமுட்டையிடும் வாத்து

ஏக காலத்தில் உள்ளூர் தென்மராட்சி அபிவிருத்திக்கழகம் என்பதன் தங்கமுட்டையிடும் வாத்து என்ற தத்துவத்தினை அப்போதைய தென்மராட்சி அபிவிருத்தி கழகம் சாவகச்சேரியின் குறிப்பாக மறைந்த ஒரு சாவகச்சேரி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தவிர வேறு யாருக்கும் இதன் விளைவுகளும் விபரங்களும் தெரியாது இருந்துள்ளனர்.

இன்று தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினை வைத்திருப்பவர்கள் நகரசபை ஆட்சியில் காத்திரமான இடங்களைப் பெறமுடியும் என்ற அரசியல் எதிர்பார்ப்பு உடைய சில பிரமுகர்கள் மல்லுக்கட்டி தென்மராட்சி அபிவிருத்தி கழக நிர்வாகத்திற்குள் நுழைந்திருக்கின்றார்கள்.

தற்போது நகர சபையை கைப்பற்ற வேண்டும் என்ற மமதையில் தமிழரசுக் கட்சியானது தனது வேட்பாளர் பெருமக்களையும் தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி நகரசபைத் தலைவர் வேட்பாளராக தென்மராட்சியின் பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் ஒருவர் தலைமையில் கையகப்படுத்தி வைத்திருக்கின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்!


சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

அவர்களது துரதிஸ்டம் தேர்தல் பின்சென்று விட்டது,இந்த ஊழல் முன்வந்து விட்டது. இது அவர்களது அரசியல் கனவில் நிச்சயம் மண் அள்ளிப்போடும் என்பது தவிர்க்க முடியாதது.

தென்மராட்சி அபிவிருத்திக் கழகமானது உத்தியோக பற்றுடைய வகையில் தனது கணக்கிற்குள் உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது றோட்டறிக் கழகம் வழங்கிய நன்கொடைச் சாதனங்களுக்கு சொந்தங்கொண்டாடிக்கொண்டு அவை இயங்கவில்லை எனவும், அதற்கான சூழல் இல்லை எனவும் வைத்தியசாலை புதிய அத்தியட்சகர் தொடர்பில் பல விமர்சனங்களை தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் முன்வைக்கின்றது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்தது என்ன? பூதாகரமான விடயத்தின் பின்னணி அம்பலம்

சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்தது என்ன? பூதாகரமான விடயத்தின் பின்னணி அம்பலம்

அபிவிருத்தி கழக நிலைப்பாடுகள்

அதன் விளைவே வைத்தியரது செயற்பாடுகளை முன்னுரிமைப்படுத்தி தென்மராட்சி அபிவிருத்தி கழக நிலைப்பாடுகளை பெறுநர் முகவரி அற்ற கடிதமாகவும் கையொப்பம் இட்டவரது பெயர், பதவி அற்ற கடிதமாகவும் வைத்திய அத்தியட்சகரை மலினப்படுததும் ஒரு ஆவணமாக வைத்திய அத்தியட்சகரது முகநூலில் அணைக்கப்பட்டிருந்தது.

ஒரு பொது அமைப்பின் செயற்பாடு என்ன? சமூகத்தில் அதன் நோக்கம் என்ன? சமூகம் நோக்கிய அமைப்பின் தேவை என்ன? அதன் நிர்வாக ஒழுங்குகள் என்ன? என்பவற்றை அறிந்திராத ஒரு கட்டமைப்பே தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்பதை இச்சிரத்தையல்லாத நடைமுறைகள் அனைத்தும் நிறுவி நிற்கின்றன.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

தென்மராட்சி அபிவிருத்தி கழகம் வைத்திய அத்தியட்சகருக்கு கடமை உத்தரவு இடும் அதிகாரம் உடைய வகையில் செயற்பட ஆரம்பிக்கும் போது வைத்திய அத்தியட்சகர் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்திற்கு எதிராக தனது கருத்துக்களை பகிர ஆரம்பிக்கின்றார்.

உண்மையில் சாவகச்சேரியில் இருக்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழக நிர்வாகத்தினர் இது விடயம் தொடர்பில் கிலி கொள்ள தேவையிருக்கவில்லை, காரணம் அவர்களிடம் யாரும் நன்கொடையை வழங்கவும் இல்லை அவர்கள் யாருக்கும் நன்கொடைகள் வழங்கவும் இல்லை, அது தொடர்பில் அவர்களிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது.

இது எவையும் முறையாக கணக்கு வழக்கிற்குள் இலங்கையில் அகப்படவில்லை இவற்றுக்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழகம் சாவகச்சேரிக்கும் எவ்வித தொடர்பும் இருந்திருக்கவில்லை.

சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி! மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி! மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

திட்டமிட்டு நடைபெறாத சத்திரசிகிச்சை

மாறாக வைத்தியர் அருச்சுணா வெளியிட்ட காணொளியில் சத்திரசிகிச்சைக் கூட செயற்படுநிலை மற்றும் தென்மராட்சி அபிவிருத்திக கழக நன்கொடை பொருட்களது நிலை தொடர்பான அறிவித்தலைக் கண்டு பிரித்தானிய தென்மராட்சி அபிவிருத்தி கழக அறக்கட்டளைத் தலைவர் வைத்தியர் கடும் குழப்பம் அடைகின்றார்.

2024 ம் ஆண்டு இவ்வருடம் அவுஸ்திரேலிய றோட்டறிக் கழகத்தின் பிரதிநிகள் இருவரும், இலங்கை றோட்டறிக் கழகத்தினரும் இணைந்து செயற்திட்ட இறுதிப்பாடுகள் மற்றும் இயங்குநிலை தொடர்பிலான இறுதி அறிக்கைக்கான அவதானத்திற்காக கள விஜயத்தினை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மேற்கொள்கின்றார்கள்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

இச்சந்தர்ப்பத்தில் வெலவெலத்துப்போன பிரித்தானிய அறக்கட்டளைத் தலைவர் உடனடியாக அப்போது வைத்தியசாலையில் அத்தியட்சகராக இருந்த வைத்தியர் குமாரவேள் அவர்களைத் தொடர்புகொண்டு உடனடியாக இந்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக்கூடம் இயங்குவதை போன்றதொரு ஏற்பாட்டினை மேற்கொண்டு ஆய்வுக்கு வருபவர்களுக்கு அதனை இயங்கு நிலையில் உள்ளது என்ற தோரணையில் அறிக்கையிட அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளும் வண்ணம் மன்றாட்டமாக வேண்டிக்கொள்கின்றார்.

உடனடியாகவே வைத்தியசாலை சத்திரசிகிச்சைக்கூடம் தயாராகின்றது. சத்திரசிகிச்சைக்கு உட்படும் நோயாளியைத் தவிர ஏனைய விடயங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்படுகின்றது.

இந்த செக்கனில் நோயாளி உள்ளீர்க்கப்பட்டாலும் சத்திரசிகிச்சை மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக உணரவைப்பதற்காக உள்ளிருந்த வைத்தியர்கள் தாதியர்கள் முகக் கவசம் கூட அணிந்து தயார்நிலையில் நோயாளிக்காக காத்திருப்பதுபோல் களவிஜயக் காரருக்காக காத்திருக்கவைக்கப்பட்டனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

முகக்கவசம் அணிவிக்கபட்டது, கிருமித் தொற்றுக்காக அல்ல களவிஜயகாரருக்கு காண்பிக்கப்பட்ட போலி ஆளணியில் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுவிடக்கூடாது என்ற உத்திக்காக ஏற்பாடுகள் என்பது பின்நாட்களில் தான் தெரியவந்தது.

இவ்வாறு திட்டமிட்டு நடைபெறாத சத்திரசிகிச்சையை நாடகமாக நிகழ்த்திக்காட்டிய பிரித்தானிய அறக்கட்டளைத் தலைவர் இவ்விடயம் தற்போது வெளிவருவது தனக்கு ஆபத்து என உணர்ந்து தற்போதைய சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகருடன் சாவகச்சேரியில் இருக்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழகம் எவ்வதிதத்திலும் கருத்து மோதலிலோ சேறு பூசலிலோ முற்படவேண்டாம். அமைதி காத்து நடவுங்கள் என அறிவுறுத்தி பல சூம் கூட்டங்களையும் வைத்தியர் மேற்கொண்டிருந்தார்.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக டக்ளஸ் விளக்கம்

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக டக்ளஸ் விளக்கம்

புனிதராக்கும் பணி

இதில் ஒரு சாரார் பிரித்தானியாவில் இருந்து நிதி கிடைக்காவிட்டால் இங்கே நிதி கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதால் அமைதியாக அவரது கருத்தை செவிமடுத்து அவரைப் புனிதராக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

இன்னும் ஒரு சாரார் வைத்தியசாலைக்குள் இருக்கும் ஏனைய வைத்தியர்கள் குறிப்பாக பொது வைத்திய நிபுணரது ஆலோசனைக்கு அமைவாக பொது மக்களது எண்ணக் கருத்துக்களை பிரதிபலிப்பது போன்றதொரு அழுத்தத்தினை தென்மராட்சி அபிவிருத்தி கழகம் ஊடாக வைத்திய அத்தியட்சகர் மீது பிரயோகித்தர்கள்.

இவைஅனைத்தும் ஒரு கட்டத்திற்கு மேல் எடுபடவில்லை. வைத்திய அத்தியட்சகர் தனது செயற்பாடு மக்கள் வரவேற்பை பெற்றுக்கொள்கின்றது என்பதையும் தனது நியாயமான செயற்பாடுகளை மக்கள் அங்கீகரிக்கின்றார்கள்.

மக்கள் அதனையே எதிர்பார்க்கின்றார்கள் என்றவிடயத்தினை அறிந்து தனது நிர்வாகப் படிமுறைகளை தாண்டியும் கருத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

நிர்வாக சிக்கல்கள்

இவ்வாறு நாட்கள் நகர நகர உள்ளக சிக்கல்கள் வலுத்தவண்ணம் முன்னகர்கின்றது. 03.07.2024 மாகாண சுகாதார வைத்திய பணிப்பாளர் சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ரஜீவை நியமித்து ஒரு கடித்துடன் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்கின்றார்.

ஏற்கனவே மத்திய அரசால் பெயர் குறித்து பதவியில் ஒருவர் உள்ள நிலையில் மேலும் ஒரு வைத்திய அத்தியட்சகரை நியமித்து நிர்வாக சிக்கல்கள் ஒன்றினை தனக்கு இல்லாத அதிகாரத்தினை அமுல்ப்படுத்தி உருவாக்கியிருக்கின்றார்.

இதனை மேற்கொள்ளுமாறு எந்தவொரு உத்தியோகப்பற்றுடைய அறிவுறுத்தல்களும் மத்திய அரசில் இருந்து மாகாண சபைக்கு அத் திகதிவரை உத்தியோகபற்றுடையவகையில் அனுப்பிவைக்கப்பட்டிருக்கவில்லை.

மத்திய சுகாதார அமைச்சின் வைத்திய அத்தியட்சகர் குறித்த கடிதத்திற்கு அமைவாக மாகாண பணிப்பாளரது வைத்திய அத்தியட்சகருக்கு கடமைகளை கையளிக்க முடியாது என்றும், தனக்கு நியமனம் வழங்கிய மத்திய அரசினால் அந் நியமனம் மீளப்பெற்று அல்லது மாற்றத்திற்கு உட்பட்டால் மாத்திரமே தான் அதனை கவனத்தில் கொள்வேன் எனவும் இவர்களைத் திருப்பி அனுப்பிவைக்கின்றார்.

சாவகச்சேரி புதிய வைத்தியர் நியமனத்தில் நடந்த தில்லு முல்லு! அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்

சாவகச்சேரி புதிய வைத்தியர் நியமனத்தில் நடந்த தில்லு முல்லு! அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்

தவறான அதிகாரப்பிரயோகத்தினால் வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பத்திற்குள் கொண்டுசென்றது மாகாண சுகாதார வேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரணவே.

நிர்வாக ரீதியாக மாகாணம் மற்றும் மத்திய அரசு மோதலை தனக்குரிய அதிகாரக் கையளிப்பு அற்ற நிலையில் தவறாக பிரயோகித்து திட்டமிட்ட முறையில் வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பும் செயற்பாடுகளுக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரே அழைத்துச் சென்றிருக்கின்றார்.

இவ்வாறு இருக்கையில் மறுநாள் 04 ம் திகதி சாவகச்சேரி வைத்திய சாலைக்குரிய கடமை வைத்தியர்கள் அனைவரும் கடமையை புறக்கணித்து பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அறிக்கையிடுகின்றார்கள்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

அவர்கள் அனைவரும் விடுதி கண்காணிப்பு,  வெளியக நோயளர் பிரிவு மற்றும் கிரமமான சிகிச்சைக்குரிய நோயாளர்கள் அனைவருக்குமுரிய சேவைகள் அனைத்தையும் முடக்கிவிடுகின்றார்கள். குறித்த தினத்திலும் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் தனியான வைத்திய அத்தியட்சகரால் கவனிக்கப்படுகின்றது.

விடயம் அடுத்த நிலைக்கு சென்று பணிப்பகிஸ்கரிப்புக்கள் தொடரும் நிலையிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க யாழ்ப்பாண தொழிற்சங்க நிர்வாகத்தினர் சிலர் மறுதினம் சாவகச்சேரி வைத்திய சாலைக்குள் சென்று அங்கே ஒரு குழுக்கலந்துரையாடலை மேற்கொள்கின்றார்கள்.

இக்கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர்,  மாகாண சுகாதார வைத்திய பணிப்பாளர் உட்பட ஒரு தொழிற்சங்க கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுகின்றது.

ஒரு அலுவலக வளாகத்தினுள் தொழிற்சங்க நிமித்தம் பிற அங்கத்தவர்கள் கலந்துகொள்வதாயின் குறித்த நிறுவனத் தலைவரது அனுமதிபெற்றே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தவிர அன்றைய தினம் குறித்த தொழிற்சங்க நிர்வாகிகள் தங்களது கடமைகளில் முறையாக விடுப்பு பெற்றே கலந்துகொண்டிருக்க வேண்டும்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் 03 முறைப்பாடுகள் பதிவு

தனது வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்தறிய சென்ற வைத்திய அத்தியட்சகர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.மாவட்ட பிரதிநிதி சட்டவைத்திய அதிகாரி மயூரன் அவர்களால் தாக்கப்பட்டு அவரது பணமும் கையடக்க தொலைபேசியும் மாகாணப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனையவர்கள் முன்னிலையில் பறித்தெடுக்கப்படுகின்றது.

இவ்விடயம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் 03 முறைப்பாடுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

இதில் பொறுப்பு வைத்திய அதிகாரி ஒரு முறைப்பாடும் வெளியில் இருந்து வருகை தந்தவர்கள் இரண்டு முறைப்பாடும் மேற்கொண்டுள்ளனர்.

இங்கே கவனிக்க வேண்டிய விடயம் நிர்வாக கட்டமைப்புக்கு உட்பட்டு வைத்திய அத்தியட்சகருக்கு மாத்திரமே பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்ளும் தகுதி இருந்திருக்கின்றது.

ஏனைய இருவரும் பொலிஸ் முறைப்பாடுகள் மேற்கொள்வதாயின் சில அலுவலக நடைமுறைகளைப் பின்பற்றியே மேற்கொள்ள முடியும்.

சமநிலையற்ற நீதியின் ஆரம்பம்

அந்த வகையில் எவையும் இடம்பெறவில்லை. காரணம் மாகாண சுகாதார வைத்தியப் பணிப்பாளர் ஒரு சகோதர மொழிக்குரியவர் என்பதால் ஏனைய இரு முறைப்பாடுகளும் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

குறைந்தபட்சம் கடமையில் உள்ள ஒருவர் மீது அவரது வளாகத்திற்குள் வைத்து தாக்குதல் கடமைக்கு பங்கம் விளைவித்தல் என்பன உறுதிசெய்யப்பட்டால் அவர்களை கைது செய்து நீதிமன்றததில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

இங்கே அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளும் பொலிஸாரல் மேற்கொள்ளப்படவில்லை.பொலிஸார் பக்கச் சார்பாக செயற்பட்டுள்ளனர் என்பது மிகவும் உறுதியாகின்றது.

தொடரும்..... 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இயக்கப்பட்ட புதிய மின்பிறப்பாக்கி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இயக்கப்பட்ட புதிய மின்பிறப்பாக்கி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 15 July, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US