பொகவந்தலாவையில் சடலமாக மீட்கப்பட்ட சிசு தொடர்பில் வெளியான தகவல்
பொகவந்தலாவை - லொய்னோன் கெசல்சமுவ ஓயாவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டது ஏழு மாத சிசுவே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் இன்று (23.03.2023) மேற்கொண்டுள்ளனர்.
மரக்கறித்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் சிசுவின் சடலம் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்ட தடயவியல் பொலிஸார் ஹட்டன் நீதிமன்ற நீதவானின் பணிப்புரைக்கு அமைய கெசல் கமுவ ஒயாவில் இருந்து சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிசுவின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பிலான மேலதிக
விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
