யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பலி
யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம்(15.05.2026) உயிரிழந்துள்ளது.
கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை
இது குறித்து மேலும் தெரியவருகையில், 23.03.2026 அன்று தாயொருவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
அதில் ஒரு பெண் குழந்தைக்கு நேற்றையதினம் தாயார் பால் கரைத்து ஊட்டியுள்ளார். பின்னர் குறித்த குழந்தை சிறிது நேரத்தில் விறைத்துப்போய் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.