குழந்தைக்கு எமனாக மாறிய தந்தை - நித்திரை தூக்கத்தினால் நேர்ந்த துயரம்
பாணந்துறை, பண்டாரகம பிரதேச செயலகத்தின் அலுபோமுல்ல பகுதியில் தந்தையின் கையில் இருந்த குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையின் கையில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்த நிலையில் தந்தை எதிர்பாராமல் தூங்கியதால் குழந்தை கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ருசேலி கேயாஷா என்ற இரண்டரை மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மூளைக்குள் இரத்தக்கசிவு
இரவுப் பணியை முடித்துவிட்டு காலை 6.15 மணிக்கு வீட்டிற்கு வந்த தந்தை, குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த போது அவர் உறங்கியுள்ளார்.

இதன்போது கைதவறி விழுந்த குழந்தையின் தலை சீமெந்து தரையில் பட்டமையினால் மூளைக்குள் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக கொழும்பு ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி மூன்று நாட்களின் பின்னர் உயிரிழந்ததுள்ளது.
மரண விசாரணை அதிகாரி மரணம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு, குழந்தையின் தாய் மற்றும் தந்தையை அழைத்து விசாரித்துள்ளார்.
குழந்தையின் மரணம்
பயம் காரணமாக இந்த விபத்தைப் பற்றி யாரிடமும் கூறாத தந்தை, பின்னர் பொலிஸ நிலையத்திற்குச் சென்று நடந்ததை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து அளுபோமுல்ல பொலிஸார் குழந்தையைச் சரியாகக் கவனிக்கத் தவறிய குற்றத்திற்காக தந்தையை கைது செய்துள்ளனர்.
குழந்தையின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தந்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.