குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்: பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
அநுராதபுரம் - வன்னியங்குளம் பிரதேசத்தில் தாயொருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார்.
குறித்த பெண் அவரது குழந்தையுடன் கிணற்றில் குதித்ததை அவதானித்த பிரதேச மக்கள், இருவரையும் மீட்டு அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் ஒரு வயதும் 3 மாதங்களுமே ஆன குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது எனவும், தாய் காப்பற்றப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
