மூன்றாம் உலகப்போர் ஆரம்பம்: பரபரப்பாகும் பாபா வாங்காவின் கணிப்பு
எதிர்காலத்தில் நடப்பவற்றை துல்லியமாகக் கணித்த பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இஸ்ரேல் போர் ஆரம்பித்துள்ள நிலையில், பாபா வாங்காவின் அந்த கணிப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இதற்கமைய 2023 ஆண்டிற்கான இவரது கணிப்புகளில் இரண்டு விடயங்கள் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.
மூன்றாம் உலகப் போர்
அவர் வெளியிட்ட கணிப்புக்களின் அடிப்படையில் இந்தாண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளார்.
மேலும், அணு ஆயுதங்களும் கூட பயன்படுத்தப்படும் எனக் கணித்துள்ளார். இதில் முதலாம் கணிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதற்கு பிரதான காரணம் தற்போது ஆரம்பமாகியுள்ள இஸ்ரேல் - ஹமாஸ் படைக்கு இடையே இடம்பெறும் போரை குறிப்பிடலாம்.
இதில் உலக நாடுகள் இரு பிரிவுகளாகப் பிரிந்துபோக வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறன.

இந்த போரானது அடுத்த மூன்றாம் உலகப் போருக்கும் வழிவகுக்க வாய்ப்பு உள்ளதாக சர்வதேச கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
ரஷ்யாவுக்கு ஆதரவு
உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன.
ஓரிரு நாடுகள் மாத்திரமே ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. சில நாடுகள் நடுநிலை நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

எனினும் இஸ்ரேல் போரில் அப்படியான நிலைப்பாடு காணப்படவில்லை. மேற்குலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக தற்போது குரல்கொடுத்து வருகின்றன.
எனினும் அரபு நாடுகள் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன.இந்நிலையில் போர் தொடரும்பட்சத்தில் அதில் மற்ற நாடுகள் உள்ளே வரலாம் என அச்சமும் சர்வதேச தரப்பில் எழுந்துள்ளது.

குறிப்பாக இஸ்ரேல் நாட்டில் அமெரிக்கர்கள் பல்லாயிரம் பேர் உள்ளனர்.
உள்நுழையும் அமெரிக்கா
அவர்களின் பாதுகாப்புக்கு ஏதேனும் சிக்கல் நிலை தோன்றும் பட்சத்தில் அமெரிக்கா உள்நுழையும் என அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

எனினும் ஒரு வல்லரசு நாடு உள்ளே வந்தால் இது அடுத்த உலகப் போரை நோக்கிய நம்மை இட்டுச் செல்லும் என்பது வல்லுநர்களின் கருத்தாக காணப்படுகிறது.
இந்நிலையில் உலக போர் வந்துவிட்டால் அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தவும் வாய்ப்புகள் மிக அதிகம்.
இதன் காரணமாகவே பாபா வாங்காவின் கணிப்புகள் உண்மையாகிவிடுமோ என்று பலரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri