இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் உள்நுழையும் அமெரிக்கா: ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் தங்கள் நாடு தாக்கப்பட்டால் அதற்கு கடுமையான பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தற்போது சர்வதேச போராக உருவெடுத்து வருகிறது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மிகப்பெரிய போராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த போரில் தற்போது மறைமுகமாக சவுதி - ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடும் ஆரம்பமாகியுள்ளது.
ஹமாஸ் இயக்கத்திற்கு இரகசியமாக உதவி
சவுதி - இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், இதற்கு சில மத்திய கிழக்கு நாடுகள் (எகிப்து, ஈரான் போன்றவை) எதிர்ப்பை வழங்கி வருகின்றன.
இதனால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை முன்கொண்டு செல்வதில் சவுதி அரேபியாவுக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹமாஸ் இயக்கத்திற்கு இரகசியமாக உதவி செய்வதே ஈரான்தான் என்ற முறைப்பாடும் சர்வதேச மட்டத்தில் அதிகரித்துள்ளது.
அதன்படி ஹமாஸ் இயக்கத்திற்கு ஆயுதங்கள், உளவு தகவல்கள், இந்த மோதலுக்கு திட்டம் என்பவற்றை வகுத்தது ஈரான்தான் என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
இதனால் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 வகைகளில் பதிலடி
இந்நிலையில் அமெரிக்காவிற்கு ஈரான் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு நாங்கள் 3 வகைகளில் பதிலடி கொடுப்போம் எனவும் நேரடியாக இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்துவோம் எனவும் அறிவிப்பை விடுத்துள்ளது.
''ஏமன், ஈரான், லெபனானில் இருக்கும் எங்களிடம் ஆதரவு படையான ஹெஸ்புல்லா மூலம் நேரடியாக தாக்குதல் நடத்துவோம்.
மூன்றாவது சிரியாவில் இருந்தும் நாங்கள் படைகளை அனுப்பி தாக்குதல் நடத்துவோம். மறக்க வேண்டாம். நாங்கள் 3 பக்கங்களில் இருந்தும் மாறி மாறி தாக்குவோம்'' என்று ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.