பீ.பி. ஜயசுந்தர பதவியை ராஜினாமா செய்யத்தீர்மானம்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தனது பதவியை ராஜினாமா செய்யத்தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பீ.பி.ஜயசுந்தரவின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரும், அமைச்சர்களும் கடும் அதிருப்தி வெளியிட்டு வரும் காரணத்தினால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் செலயாளரை சில சிரேஸ்ட அமைச்சர்கள் பகிரங்கமாகவே விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் இன்று நெருக்கடியான நிலைமைகளை எட்டுவதற்கு பீ.பி.ஜயசுந்தரவின் செயற்பாடுகளே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், பீ.பி.ஜயசுந்தர உடனடியாக பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என ஜனாதிபதி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி வெளிநாட்டு விஜயம் செய்துள்ளதனால் அவ்வாறான ஓர் தீர்மானத்தை பீ.பி.ஜயசுந்தர உடனடியாக எடுக்கக்கூடிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதியின் செயலாளராக கடமையாற்றி வரும் பீ.பி.ஜயசுந்தர பதவி விலகினால் அந்தப் பதவிக்கு ஏற்படக்கூடிய வெற்றிடத்திற்கு வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் டி.எம். அனுர திஸாநாயக்க நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அனுர திஸாநாயக்க, அமைச்சர் சமல் ராஜபக்சவிற்கு மிகவும் நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் பீ.பி. ஜயசுந்தரவை சமல் ராஜபக்ச கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நாட்டின் நெருக்கடி நிலைமைக்கு ஜயசுந்தரவின் தீர்மானங்களே காரணம் என குற்றம் சுமத்தியிருந்தார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri