தம்மிக்க பண்டாரவின் கொரோனா பாணி பரிசோதனையில் தோல்வி!
கோவிட் தொற்றுக்கு என ஆயுர்வேத வைத்தியர் தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட மருத்துவ பாணி, கோவிட் வைரஸை எந்த வகையிலும் குணப்படுத்தாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பாணியை மறுஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு அது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாணியை தம்மிக்க பண்டார பல சந்தர்ப்பங்களில் கேகுர்லை மக்களுக்கு விநியோகிக்கத் தொடங்கியதையடுத்து, பாணியை மறுபரிசீலனை செய்ய சுகாதார அமைச்சகம் ஒரு சிறப்புக் குழுவை நியமித்தது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நெறிமுறைக் குழு 2020 டிசம்பர் 30 ஆம்திகதி பாணியிற்கு நெறிமுறை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரியில் இந்த ஆய்வுக்கு நிர்வாக ஒப்புதல் கிடைத்தது.
மேலும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அமைச்சர்களும் பாணியை எடுத்துக் கொண்டனர்.
எனினும், அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த ஆகியோர் கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.