கோவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றப்படும் ஆயுர்வேத வைத்தியசாலைகள்
ஆயுர்வேத வைத்தியசாலைகள் கோவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றப்படும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படும் சுமார் 50 ஆயுர்வேத வைத்தியசாலைகள் கோவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுர்வேத வைத்தியசாலைகள் உடனடி கோவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆயுர்வேத வைத்தியசாலைகள் கோவிட் சிகிச்சை நிலையங்காக மாற்றப்படுவதன் மூலம் மேலும் 3500 படுக்கைகள் கொவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆயுர்வேத வைத்தியசாலை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.