அம்பாறையில் சட்டவிரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட ஆயுர்வேத வைத்தியர் கைது
அம்பாறையில் சட்டவிரோதமாக ஆங்கில மருந்து வகைகள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகளை வைத்திருந்த ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (04.04.2024) இரவு பெரியநீலாவணை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேத வைத்தியரான 63 வயது மதிக்கத்தக்க சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போதையூட்டும் மாத்திரைகள்
மேலும், அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள ஆயுர்வேத நிலையம் ஒன்றில் சட்டவிரோதமாக போதையூட்டும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸாரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பல்வேறு வகையான 3500 ஆங்கில மாத்திரைகள் மற்றும் 850 போதையூட்டும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இது தொடர்பிலான மேலதிக விசரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |