கல்குடாவில் தனிமையில் வீடொன்றில் வசித்து வந்த பெண் உயிரிழப்பு
கல்குடா - வாழைச்சேனையில் தனிமையில் வீடொன்றில் வசித்து வந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று (09.02.2023) இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்குடா - வாழைச்சேனையைச் சேர்ந்த பாஸ்கரன் சற்குணதேவி (வயது (52)) என்ற 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெண்ணொருவர் உயிரிழப்பு
கடந்த 15 நாட்களாக குறித்த பெண்ணின் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் உறவினர்கள் பிரதேச கிராமசேவகருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸாரின் துணையுடன் அவர் வசித்த வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 10 வருடங்களாக மலேஷியாவில் தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த 2 மதாங்களாக வாழைச்சேனையில் உள்ள தமது வீட்டில் வசித்து வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
