மட்டக்களப்பில் வெண்கோல் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி
பார்வைக் குறைபாடுடைய நபர்களின் உரிமைகள், சுதந்திரம், சுயமாக இயங்கும் திறன், கண்ணியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பில் வெண்கோல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நாளை (17) நடைபெறவுள்ளது.
இதன்போது, விழிப்புணர்வு நடைபவனி கல்லடிப் பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமாகி, கல்லடி உப்போடை, நோச்சிமுனையில் அமைந்துள்ள துளசி மண்டபத்தைச் சென்றடையவுள்ளது.
விழிப்புணர்வு நடைபவனி
நிகழ்வு காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்வைக் குறைபாடுடைய நபர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், அவர்களின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் மதிக்கும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகமொன்றை உருவாக்குவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
அத்துடன், பார்வைக் குறைபாடுடைய நபர்களுக்கு ஆதரவான சமூகச் சூழலை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதும் இந்நிகழ்வின் நோக்கமாக அமைந்துள்ளது.