மாந்தையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவணி
மன்னார் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணி மனையின் ஏற்பாட்டில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவணி நேற்றைய தினம்(24) இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைத்தலுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் முகமாகவும் அதே நேரம் பாடசாலை சூழலில் புகைத்தல் உடன் தொடர்பு பட்ட பொருட்களின் விற்பனையை தடை செய்யும் முகமாகவும் குறித்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றது.
விழிப்புணர்வு நடைபவனி
'புகைத்தல் அற்ற பிரதேசத்தை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த பேரணியில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் வீதிகளின் இரு புறங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டதுடன் பொது மக்களுக்கு புகைத்தல் தொடர்பான துண்டு பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
விழிப்புணர்வு நடைபவனியில் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் ஊழியர்கள்,மாந்தை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






