மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி விளக்கமறியலில்..
புதிய இணைப்பு
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
28 மில்லியன் ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளியிடத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைக்கு ஒத்துழைப்பு
ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் சொத்து தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, சட்டவிரோத சொத்துக்களை வைத்திருப்பது தொடர்பான ஒரு சம்பவத்தில் வாக்குமூலம் அளிக்க கடந்த ஆண்டு டிசம்பரில் நெவில் வன்னியாராச்சி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



