சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று(11.06.2025) நடைபெற்றது.
குறித்த விழிப்புணர்வு பேரணி காலை 9.00 மணியளவில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திலிருந்து பளை பொதுச்சந்தை வரை நடாத்தப்பட்டது.
இதில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பளை மத்திய கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய மட்ட அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழிப்பூட்டும் நடவடிக்கைகள்
இறுதியில் போதைப்பொருளுக்கு எதிரான கருத்துரையை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆற்றியதுடன் போதைப்பொருள், புகைத்தலுக்கு எதிராக மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
