சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞாயிற்று கிழமை (01.12.2024, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் முதலாவது விழிப்புணர்வு நிகழ்வாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நகரின் பிரதான வீதிகளூடாக சென்று மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களம் வரை சென்றடைந்து பின்னர் அங்கு,விழிப்புணர்வு நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த ஆண்டின் கருப்பொருளாக சரியான வழியில் முன் செல்வோம் என்னும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
பாலியல் நோய்
சமூகத்தில் இந்த பாலியல் நோயின் ஆபத்து சம்பந்தமான பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டன. மாவட்ட பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள், என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பே ரூந்துகளிலும் நோயின் தாக்கத்தை பற்றி விசேட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |