கிளிநொச்சியில் போக்குவரத்து பொலிஸாருக்கான விழிப்புணர்வு நிகழ்வு
போக்குவரத்து அபராதங்களை செலுத்துவது குறித்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்து பொலிஸாருக்கான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
செயலமர்வில் கலந்து கொண்டவர்கள்

குறித்த விழிப்புணர்வு செயலமர்வில் Harsha Purasinghe Chairman, Digital Task Force Ministry of transport, highways and Urban Development, வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட போக்குவரத்து பொலிஸார் கலந்து கொண்டனர்.
நாளைய தினம் வடமாகாணத்திற்கான போக்குவரத்து அபராதங்களை Gov pay மூலம் செலுத்தும் ஆரம்ப நிகழ்வு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.



கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam