போதைப்பொருள் பாவனை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு
சம்மாந்துறையில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை இன்றைய தினம் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
விழிப்புணர்வு செயற்பாடு
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.டி.எம்.ஜனுபர் தலைமையில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றசாட், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் ஆகியோரால் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர், பிரதி அதிபர் ஏ.ஆர்.எம்.உவைஸ், சம்மாந்துறை பிரதேச செயலக போதைப் பொருள் தடுப்பு சிகிச்சை அழிப்பு மற்றும் புனர்வாழ்வு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.இக்ராம், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
