உத்தேச கடற்றொழிலாளர் சட்டமூலம் தொடர்பிலான தெளிவூட்டல் பிரச்சாரம்
புதிதாக கொண்டு வரப்பட்ட உள்ள உத்தேச கடற்றொழிலாளர் சட்டமூலம் தொடர்பில் தெளிவூட்டல் பிரச்சாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரச்சாரம் இன்று (13.1.2024) திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணபிள்ளை ஸ்ரீ பிரசாத் தலைமையில் பிரச்சார நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மக்களுக்கு தெளிவூட்டல்
பத்தாம் குறிச்சி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டு திருக்கடலூர், வீரநகர், பள்ளத்தோட்டம், ஜமாலியா ஆகிய கடற்றொழிலாளர் கிராம மக்களின் வீடுகளுக்கு சென்று மக்களுக்கு தெளிவூட்டல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வைத்தியலிங்கம், கன்னியா பிரதேச செயற்பாட்டாளர் மோகன், தம்பலகாமம் செயற்பாட்டாளர் சிந்து கணேஷ் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
