தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு(Video)
தேசிய ரீதியில் நடைபெற்ற தேயிலை கொழுந்து கொய்யும் மலையக நடனத்தில் முதலிடம் பெற்ற வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர்களுக்கு மாபெரும் கௌரவிப்பு இன்றையதினம் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டு, தேவாரம் இசைக்கப்பட்டு வரவேற்புரையுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள், தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற நடனம் என்பன இடம்பெற்றன.
நினைவுப் பரிசில்கள்
அதனைத் தொடர்ந்து குறித்த நடனத்தினை பயிற்றுவித்த நடன ஆசிரியர் சகிலா சுதாகரன், சங்கீத ஆசிரியர் நித்தியா தவக்குமார் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், பங்குபற்றிய மாணவர்களுக்கு கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினாலும் நடன ஆசிரியராலும் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கல்லூரியின் முதல்வர் லங்கா பிரதீபன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நடன ஆசிரிய ஆலோசகர் சுபத்திரா கந்தகுமார் அவர்களும், சிறப்பு விருந்தினராக பழைய மாணவன் அ.சிவானந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
