திருகோணமலையில் முச்சக்கரவண்டி இராணுவப் பேருந்துடன் மோதி விபத்து:இருவர் படுகாயம்
திருகோணமலை-கந்தளாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(21.5.2026) கந்தளாய், 87ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சிறுநீரகச் சுத்திகரிப்பு செய்து கொண்டு தம்பதியினர் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் மயக்கம் காரணமாக முச்சக்கரவண்டியும் இராணுவப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த தம்பதியினர் கந்தளாய் தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய், அக்போபுர பகுதியைச் சேர்ந்த தம்பதியினரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக கந்தளாய் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.