ஹயஸ் வாகனம் மோதி ஓட்டோ சாரதி மரணம்!
ஓட்டோவும் ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டோ சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – பொல்பிட்டிய யடிபேலிய பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
சாரதி மரணம்
கொழும்பில் இருந்து வட்டகொட நோக்கிச் சென்ற ஓட்டோவும், ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த ஓட்டோ சாரதி கிதுல்கல தலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பொரளையைச் சேர்ந்த 53 வயதான நபரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஓட்டோவின் பின்புற இருக்கையில் இருந்த ஒரு பெண்ணும் காயமடைந்த நிலையில் தலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பொலிஸாரால் கைது
அதிக வேகத்தில் சென்ற ஓட்டோ வேகக் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் ஓட்டோவும் ஹயஸ் வாகனமும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
ஹயஸ் வாகனத்தின் சாரதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிட்டிய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam